பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் பிப்.18-இல் தாக்கல்

பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் பிப். 18-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.

பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் பிப். 18-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி நிதி நிலைக் குழுத் தலைவர் ஹேமலதாகோபாலையா செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: பெங்களூரு மாநகராட்சியில் காங்கிரஸ்-மஜத கூட்டணி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், வரும் மே மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் அறிவிப்பிற்கு முன்னதாகவே பெங்களூரு மாநகராட்சியில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம். 
2019-20-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை பிப். 18-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும். பட்ஜெட்டில் சொத்துவரி வசூல், மாநகராட்சி மருத்துவமனைகளின் மேம்பாட்டிற்கும், பெண்குழந்தைகளுக்கான சிறப்பு திட்டங்கள், மழை வெள்ள பிரச்னை, சாலைக்குழிகளை சீர் செய்வதற்கும், மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்குவது உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
பெங்களூருக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ. 8,015 கோடி நிதியை ஒதுக்குவதாக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். இதில் முதல்கட்டமாக ரூ. 2,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com