வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க வாய்ப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர்களைக் சேர்ப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் வாய்ப்பு ஏற்படுத்திதந்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர்களைக் சேர்ப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் வாய்ப்பு ஏற்படுத்திதந்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, 2019-ஆம் ஆண்டு ஜன.1-ஆம் தேதியுடன் 18 அல்லது 19 வயது நிரம்பக்கூடியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. 
அப்போது பெயர் சேர்க்க மனு அளித்து, அது நிராகரிக்கப்பட்டிருந்தால் அவர்களின் பெயர்களை சேர்க்க 
வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. எனவே, பெயர்களை சேர்க்க, திருத்த மாவட்டகூடுதல் தேர்தல் அதிகாரிகள் அலுவலகங்களில் சிறப்புஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெயர், தந்தை/கணவர் பெயர், வீட்டுமுகவரி, பாலினம், வயது உள்ளிட்ட விவரங்களுடன் பொதுமக்கள் விண்ணப்பங்களை அளிக்கலாம். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறுகேட்டுக் கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com