முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
சிக்பளாப்பூர் அஞ்சலகத்தில் கடவுச்சீட்டு மையம் திறப்பு
By DIN | Published On : 28th February 2019 09:11 AM | Last Updated : 28th February 2019 09:11 AM | அ+அ அ- |

புதிதாக நிறுவப்பட்டுள்ள கடவுச்சீட்டு மையம் சிக்பளாப்பூர் மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்பமொய்லி தெரிவித்தார்.
சிக்பளாப்பூரில் புதன்கிழமை அஞ்சகத்தில் புதிய கடவுச்சீட்டு மையத்தைத் திறந்துவைத்து, அவர் பேசியது: சிக்பளாப்பூர் மாவட்டமக்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கு பெங்களூருக்கு செல்லவேண்டிய கட்டாயம் இருந்தது. தற்போது அந்த வசதியை சிக்பளாப்பூரிலேயே பெறமுடியும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எனவே, புதிதாக அமைந்துள்ள கடவுச்சீட்டுமையம் சிக்பளாப்பூர் மாவட்ட மக்களுக்கு உதவியாக இருக்கும். இதனால் வேலைபளு, பணவிரயம் குறைவதோடு இடைத்தரகர்களின் தொந்தரவும் கணிசமாக குறையும். கடவுச்சீட்டு பெறுவது தற்போது எளிமையாக்கப்பட்டுள்ளது. எனவே, இணையதளத்தில் விண்ணப்பித்துவிட்டு, நேரடியாக கடவுச்சீட்டு மையத்திற்கு சென்று தங்கள் கடவுச்சீட்டுகளை பெறலாம். மேலும் கடவுச்சீட்டு பெறுவது தொடர்பான அனைத்து விவரங்களும் கடவுச்சீட்டு மையத்தில் வைக்கப்பட்டுள்ளதை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
இந்தவிழாவில் தொகுதி எம்எல்ஏ சுதாகர், அஞ்சல் துறை உயரதிகாரிகள் சார்லஸ்லோபோ, பரத்குமார் குத்தாதி, கூடுதல்மாவட்ட ஆட்சியர் ஆராத்தி ஆனந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.