முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை
By DIN | Published On : 28th February 2019 09:14 AM | Last Updated : 28th February 2019 09:14 AM | அ+அ அ- |

ராஜாஜிநகர் மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்பு படையினர் ரூ. 8.72 லட்சம் ரொக்கப்பணம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
பெங்களூரு ராஜாஜிநகர் மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக வந்த தகவலையடுத்து, புதன்கிழமை அந்த அலுவலகத்தின் மீதும் அதைச் சுற்றியுள்ள கடைகள் மீதும் லஞ்ச ஒழிப்பு படையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ரூ. 8.72 லட்சம் மதிப்புள்ள ரொக்கப்பணம், 8 மண்டல அலுவலகத்தின் முத்திரைகள், 1026 வாகன உரிமங்கள், 1523 ஓட்டுநர் உரிமங்கள், 19 தகுதித் சான்றுகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து பெங்களூரு லஞ்ச ஒழிப்பு படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.