முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
ரயில்களில் பயணிகளிடம் திருட்டு: 5 பேர் கைது
By DIN | Published On : 28th February 2019 09:12 AM | Last Updated : 28th February 2019 09:12 AM | அ+அ அ- |

ரயில்களில் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீஸார், ரூ. 28 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்க நகையை பறிமுதல் செய்தனர்.
தில்லி சுல்தான்புரியைச் சேர்ந்த ரன்வீர்சிங் (43), சத்பீர் (46), வினோத் (31), லலித்குமார் (27), ஹரியாணாவைச் சேர்ந்த சுபாஷ் (44) ஆகியோர் ரயில் பயணிகளிடமிருந்து தங்கநகை உள்ளிட்ட பொருள்களை திருடி வந்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்த கே.ஆர்.புரம் ரயில்வே போலீஸார், 5 பேரையும் கைது செய்து, ரூ. 28 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்கநகை பறிமுதல் செய்தனர்.