முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
அரசுப் பேருந்து மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் சாவு
By DIN | Published On : 04th January 2019 08:14 AM | Last Updated : 04th January 2019 08:14 AM | அ+அ அ- |

பெங்களூரில் அரசுப் பேருந்து மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
பெங்களூரு எம்.வி.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சரத் (30). தனியார் நிறுவன ஊழியரான இவர், புதன்கிழமை நள்ளிரவு பணிமுடிந்து தனது சக ஊழியர் சந்தோஷுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பழைய மதராஸ் சாலையில், வேகமாக வந்த அரசு பேருந்து, மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த சரத் நிகழ்விடத்திலே உயிரிழந்தார். காயமடைந்த சந்தோஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அல்சூர் போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.