Enable Javscript for better performance
கன்னடத்துடன் ஆங்கில அறிவும் அவசியம்: மாணவர்களுக்கு துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் அறிவுரை- Dinamani

சுடச்சுட

    

    கன்னடத்துடன் ஆங்கில அறிவும் அவசியம்: மாணவர்களுக்கு துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் அறிவுரை

    By DIN  |   Published on : 08th January 2019 09:39 AM  |   அ+அ அ-   |    |  

    மாணவர்களுக்கு கன்னடத்துடன் ஆங்கில அறிவும் அவசியம் என்று கர்நாடக மாநிலத் துணைமுதல்வர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
    விஸ்வேஷ்வரையா தொழில்நுட்ப அருங்காட்சியகம்,   கர்நாடக அரசின் கல்வித் துறை ஆகியன இணைந்து பெங்களூரு  புனித வளனார் இந்திய உயர்நிலைப் பள்ளி அரங்கில்  தென் மாநிலங்களுக்கான அறிவியல் திருவிழாவை திங்கள்கிழமை நடத்தின. இந்த விழாவைத் தொடக்கிவைத்த பரமேஸ்வர் செய்தியாளர்களிடம் கூறியது:-
    தேசிய,  சர்வதேச அளவிலான போட்டிகளை எதிர்கொள்ள ஆங்கில அறிவு அவசியம் தேவைப்படுகிறது. இதனால், 
    கர்நாடகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் ஆயிரம் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்றுமொழி வழங்கப்படவுள்ளது. இதனால்,   கன்னடப் பயிற்றுமொழிப் பள்ளிகளை அலட்சியப்படுத்திவிடுவோம் என்று புரிந்துகொள்ளக் கூடாது.
    தாய் மொழியான கன்னடத்துடன் ஆங்கில அறிவு அவசியம் என்பதே கர்நாடக அரசின் நிலைப்பாடாகும். எனவே, கன்னடப்பள்ளிகளை மூடும் பேச்சுக்கே இடமில்லை. 
    கன்னடத்தைப் பாதுகாக்கவும், வளர்த்தெடுக்கவும் தொடர்ந்து பங்காற்றுவோம்.  கன்னட மொழி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பது அரசின் தலையாய கடமையாகும். உலக அளவிலான வேலைவாய்ப்புகளை பெற  ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்வது தவிர்க்க முடியாததாகும். 
    எந்தவொரு மாநிலமும் முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டும். அதற்குத் தரமான கல்வி அவசியமாகும். அதற்கு தகுந்தப்படி அரசின் முடிவுகள் அமைய வேண்டும் என்றார் அவர்.
    முன்பாக,  விழாவில் பரமேஸ்வர் பேசியது:-
    கர்நாடகத்தில் அறிவியல் வளர்ச்சிக்கு பல்வேறுதிட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். இதன் அடுத்தக்கட்டமாக, அனைத்து மாவட்டத்தலைநகரங்களிலும் அறிவியல் மையங்கள் தொடங்கப்படவிருக்கின்றன. 
    உலக அளவில் நிகழ்ந்துவரும் அறிவியல் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் வகையில் குழந்தைகள் அறிவியல் அறிவை பெருக்கிக் கொள்ள வேண்டும். அதற்காக மண்டல மட்டத்தில் உலக அளவிலான அறிவியல் மையங்களை அமைக்கவும் யோசித்துவருகிறோம்.இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் நோக்கில் அறிவியல் துறை வளர்ச்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும்.  
    அறிவியல் துறையில் பெங்களூரு நல்ல வளர்ச்சி அடைந்து,   உலக அளவிலான அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. மைசூரை  ஆண்ட  உடையார் மன்னர்கள் பெங்களூரில்  இந்திய அறிவியல் கழகம் தொடங்க அந்தக் காலத்திலேயே 400 ஏக்கர் நிலத்தைத் தானமாக அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, பெங்களூரில்  அறிவியலை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் தோன்றின.  கர்நாடக மாணவர்கள் அறிவியலில் உலகசாதனைகளை புரிந்துள்ளனர். இதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் கர்நாடக அரசு செய்யும் என்றார் அவர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp