சுடச்சுட

  

  ஆவணங்களின்றி பேருந்தில் கொண்டு சென்ற வெள்ளி விளக்குகள் பறிமுதல்

  By DIN  |   Published on : 12th January 2019 04:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடக அரசுப் பேருந்தில் உரிய ஆவணங்களின்றி  கொண்டு சென்ற ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 699 வெள்ளி விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
  பெங்களூரிலிருந்து வியாழக்கிழமை இரவு விஜயவாடா சென்ற கர்நாடக அரசுப் பேருந்தில் வெள்ளி
  விளக்குகள் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்வதாக மண்டல கட்டுப்பாட்டளருக்கு தகவல் கிடைத்ததாம். இதையடுத்து ஹொசகோட்டை அருகே சென்ற கொண்டிருந்த பேருந்தை அதிகாரிகள் அடங்கிய குழு நிறுத்தி பரிசோதனை செய்தனர். 
  அப்போது பேருந்து 4 மூட்டைகளில் இருந்த 699 வெள்ளி விளக்குகளை பறிமுதல் செய்துள்ளனர். சுமார் 41 கிலோ எடையுள்ள இந்த விளக்குகளில் மதிப்பு ரூ. 15 லட்சமாகும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பேருந்தின் ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்தி, நடத்துனர் நாராயணப்பா ஆகியோரை போலீஸார் விசாரித்து வருகின்றனர். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai