சுடச்சுட

  

  எலஹங்கா போக்குவரத்து அலுவலகத்தில் ஜன.28-முதல் வாகனப் பதிவு நிறுத்தம்

  By DIN  |   Published on : 12th January 2019 04:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெங்களூரில் உள்ள எலஹங்கா மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் ஜன.28-ஆம் தேதி முதல் வாகனப் பதிவு தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
  இதுகுறித்து போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு மண்டலத்தில் உள்ள எலஹங்கா மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் ஒருங்கிணைந்த மற்றும் இணையதளம்சார் இ-வாகன்-4 மென்பொருளை கணினியில் தரவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. 
  எனவே, எலஹங்கா மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் ஜன.28 முதல் பிப்.5-ஆம் தேதிவரையிலான காலக்கட்டத்தில் வாகனப்பதிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது. மாநில போக்குவரத்துக்கழகம் மற்றும் மத்திய நெடுஞ்சாலைத் துறையின் ஒத்துழைப்பில் மென்பொருள் தரவேற்றப் பணிகள் நடக்கவிருக்கின்றன. 
  எனவே, ஏற்கெனவே வாகனப் பதிவுக்காக விண்ணப்பங்களை செலுத்தியிருப்போர், புதிய விண்ணப்பங்களை அளிக்கவிருப்போர் ஜன.27-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புதிய மென்பொருள், பழைய விண்ணப்பங்களை ஏற்காது என்பதால் இந்த பணியை ஜன.27-ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும். இந்த காலக்கட்டத்தில் கட்டணம் செலுத்துவது, வரிசெலுத்துவதும் நிறுத்திவைக்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai