சுடச்சுட

  

  கத்தோலிக்க கிறிஸ்தவ வழிபாட்டு முறைகளை தமிழில் வெளியிட வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 12th January 2019 04:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கத்தோலிக்க கிறிஸ்தவ வழிபாட்டு முறைகளை தமிழில் வெளியிட வேண்டும் என்று கர்நாடக தமிழ் கிறிஸ்தவர் பொது நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
  இதுகுறித்து சங்கத்தின் கோலார் தங்கவயல் கிளை சார்பில் வெளியிட்ட அறிக்கை:
  உலக முழுவதும் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைமையான ரோமில் இருந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், வழிப்பாட்டு முறைகளில் புதிய வழிமுறைகள் நடைமுறைபடுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கர்நாடக மாநில கத்தோலிக்க மறைமாவட்டங்களின் சார்பில் புதிய வழிபாட்டு வழிமுறைகள் கன்னட மொழியில் புத்தகமாக அச்சிடப்பட்டு ஆலையங்களில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கர்நாடக கத்தோலிக்க திருச்சபை பெருமளவு தமிழர்களால்
  நிறைந்துள்ளது. 
  எனவே புதிய வழிபாட்டு முறைகள் தமிழ் மொழியில் வெளியிட வேண்டியது கட்டாயமாகும். அது தாய் மொழியில் இருந்தால் மட்டுமே மனம் ஒன்றி இறை வழிபாட்டில் ஈடுபட முடியும். எனவே, கர்நாடக மறைமாவட்ட தலைமை புதிய வழிபாட்டு முறைகளை தமிழில் அச்சிட்டு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் தெரிவித்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai