சுடச்சுட

  

  சாலைத் தடுப்புச்சுவரில் கார் மோதியதில் தந்தை, மகன் உயிரிழந்தனர்.
  ராய்ச்சூரு மாவட்டம், சிந்தனூருக்கு வெள்ளிக்கிழமை காலை காரில் ஹனீப்குரோஷி (60), மகன் அப்துல்லா (16) உள்ளிட்ட 4 பேர் சென்று கொண்டிருந்தனர். சிந்தனூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைத் தடுப்புச்சுவரில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஹனீப்குரோஷி, அப்துல்லா ஆகியோர் நிகழ்விடத்திலே உயிரிழந்தனர். 
  காயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சிந்தனூர் போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai