சுடச்சுட

    

    சிறு, குறு நிறுவனங்களின் ஜிஎஸ்டி  உச்சவரம்பை உயர்த்தியதற்கு வரவேற்பு

    By DIN  |   Published on : 12th January 2019 04:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிறு, குறு, நிறுவனங்களின் பொருள் மற்றும் சேவை வரி உச்ச வரம்பை உயர்த்தியதற்கு கர்நாடக தொழில் வர்த்தகசபைக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
    இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவர் சுதாகர் ஷெட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக திகழ்வது சிறு,குறு நிறுவனங்கள். அந்த நிறுவனங்களுக்கான பொருள் மற்றும் சேவை வரி உச்சவரம்பை ரூ. 20 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சமாகவும், ஆண்டு விற்றுமுதலை ரூ. 1 கோடியிலிருந்து 1.5 கோடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. 
    மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கர்நாடக தொழில் வர்த்தகசபைக் கூட்டமைப்பு வரவேற்கிறது. நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் சிறு, குறு நிறுவனங்களின் பங்களிப்பு அபரீதமாக உள்ளது என அதில் அவர் தெரிவித்துள்ளார். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai