சுடச்சுட

  

  பெங்களூரில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ஜன.19-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது.
  பெங்களூரு சஹகார்நகர் 60-ஆவது குறுத்தெரு,தேவ்-இன் பள்ளி வளாகத்தில் ஜன.19-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடத்தப்படுகிறது. இதில் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம்சாரா, நிதி, ஆட்டோமொபைல், உற்பத்தி, விருந்தோம்பல், மெக்கானிக்கல் துறைகளை சார்ந்த 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. 
  முகாமில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க வாய்ப்புள்ளது. இதில் ஆண்கள், பெண்கள் கலந்துகொள்ளலாம். வேலைவாய்பு முகாமில் எழுத்தறிவில்லாதவர்கள், பாதியில் பள்ளி படிப்பை இழந்தவர்கள், எஸ்எஸ்எல்சி, பியூசி, ஐடிஐ, பட்டயம் படித்தோர், இளநிலை, முதுநிலை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. 
  18-30 வயதுக்குள்பட்ட புதியவர்கள் முதல் ஓராண்டு வேலை அனுபவம் கொண்டவர்கள் பங்கேற்கலாம். வேலைதேடிவருவோர் தன்விவரக் குறிப்பு 6 படிகள், கடவுச்சீட்டு அளவு புகைப்படம் 6 படிகள், அசல் மற்றும் நகல் கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு போன்ற அடையாள அட்டைகளின் நகல்களை கொண்டுவர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 080-22261184, 22374582, 22259351, 236266678 ஆகிய தொலைபேசிஎண்களை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai