சுடச்சுட

  

  மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
  பெங்களூரு பசவனகுடியில் உள்ள தையல் நிலையத்தில் தையலராகப் பணியாற்றி வந்த வேணு (25). வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் நேஷனல் கல்லூரி ரயில் நிலையத்தில், மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்வதை கவனித்த, மெட்ரோ ரயில் ஓட்டுநர், உடனடியாக ரயிலை நிறுத்தினார். 
  ரயில் நிலைய ஊழியர்கள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்துள்ளனர். இதனையடுத்து ரயில் முன் பாய்ந்த வேணுவை மீட்டுள்ளனர். இதில் தலையில் காயமடைந்த அவரை, நிமான்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து கிரிநகர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.  
   இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வேணுவை, முதல்வர் குமாரசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai