சுடச்சுட

  

  ஹுப்பள்ளி-மைசூரு இடையிலான ரயில் சேவை அசோகபுரம்  ரயில்நிலையம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஹுப்பள்ளி-மைசூரு இடையிலான விஸ்வமானவா விரைவு ரயில் சேவை (17325/17326) அசோகபுரம் ரயில்நிலையம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
  ஹுப்பள்ளியில் தினமும் காலை 8.30 மணிக்குப் புறப்படும் விரைவு ரயில் (17325),  இரவு 8.40 மணியளவில் மைசூரைச் சென்றடையும். அங்கிருந்து 8.55 மணியளவில் புறப்பட்டு 9.05 மணியளவில் அசோகபுரம் சென்றடையும். 
  மறு மார்க்கத்தில் (17326) அதிகாலை 5.15 மணியளவில் அசோகபுரத்தில் புறப்பட்டு, மைசூருக்கு 5.25 மணியளவில் சென்றடையும் அங்கிருந்து 5.50 மணியளவில் புறப்பட்டு, இரவு 6.55 மணியளவில் ஹுப்பள்ளிக்கு சென்றடையும். இந்த மாற்றம் அசோகபுரத்தில் ஜன. 16-ஆம் தேதியும், ஹுப்பள்ளியில் ஜன. 17-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai