ஐடிஐ தமிழ் மன்றத்தில் நாளை பொங்கல் விழா

பெங்களூரில் உள்ள ஐடிஐ தமிழ் மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.13) பொங்கல் விழா நடக்கவிருக்கிறது.

பெங்களூரில் உள்ள ஐடிஐ தமிழ் மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.13) பொங்கல் விழா நடக்கவிருக்கிறது.
இதுகுறித்து ஐடிஐ தமிழ் மன்றம் வெளியிட்ட அறிக்கை:
ஐடிஐ தமிழ்மன்றம் சார்பில் பெங்களூரு ராமமூர்த்திநகர் தூரவாணிநகரில் உள்ள மன்ற அலுவலகத்தின் திருவள்ளுவர் அரங்கத்தில் ஜன.13-ஆம் தேதிகாலை 10மணிக்கு 185-ஆவது பாவாணர் பாட்டரங்கம் மற்றும் பொங்கல் விழா "பெங்களூரில் ஒரு பொங்கல் கவிதை ஆறு' என்ற பெயரில்
நடத்தப்படுகிறது.
வெற்றிப்பேரொளி தலைமையில் நடைபெறும் இந்த விழாவுக்கு மன்றத் தலைவர் இரா.பாஸ்கரன், சிறுமலர் உயர்நிலைப் பள்ளி செயலாளர் ஆ.மதுசூதனபாபு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மன்றச் செயலாளர் கு.மாசிலாமணி அனைவரையும் வரவேற்கிறார். பாவாணர் பாட்டரங்கப் பொறுப்பாளர் இராம.இளங்கோவன் அறிமுக உரையாற்றுகிறார். 
பத்திரிகையாளர் ஆ.வி.மதியழகன், மா.அண்ணாதுரை, நா.மகிழ்நன் ஆகியோர் தொடக்க கவிதை படைக்கிறார்கள். விழாவை கிருஷ்ணராஜபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பி.ஏ.பசவராஜ் தொடக்கிவைக்கிறார். பாபுசெல்வம், லட்சுமண்குமார், மு.சரவணன், வா.ஸ்ரீதரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். 
இறையடியான், கி.சு.இளங்கோவன், வ.மலர்மன்னன், சுவாமி இராமானுஜம் ஆகியோர் கவிதை வாசிக்கின்றனர்.இதைத் தொடர்ந்து, "பொங்குக பொங்குக பொங்குகவே' என்ற தலைப்பில் புதுமைக்கோமான், இரா.கு.அரங்கசாமி, ப.மூர்த்தி, வே.அரசு, சா.நடராசன், சு.சதாசிவம், பெ.கமலநாதன், சி.நடேசன் உள்ளிட்ட கர்நாடகம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கவிஞர்கள் கவிதை படிக்கின்றனர். 
கவிதைபாடுவோர் அனைவருக்கும் கவிமழை விருது வழங்கி கெளரவிக்கப்படுகிறார்கள். பாவலர், சுவைஞ உள்பட அனைவருக்கும் நாள்காட்டி, பொங்கல், வடை, கன்னல் வழங்கப்படுகிறது. காலை 10மணிக்குள் வருகைதந்து பெயர்களைப் பதிவுசெய்துகொண்டு, கவிதை வாசிக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com