நேரு கோளரங்கத்தில் நாளை அறிவியல் சங்கக் கூட்டம்

பெங்களூரில் உள்ள ஜவாஹர்லால் நேரு கோளரங்கத்தில் ஜன.13-ஆம் தேதி அறிவியல் சங்கக் கூட்டம் நடக்கவிருக்கிறது.

பெங்களூரில் உள்ள ஜவாஹர்லால் நேரு கோளரங்கத்தில் ஜன.13-ஆம் தேதி அறிவியல் சங்கக் கூட்டம் நடக்கவிருக்கிறது.
இதுகுறித்து ஜவாஹர்லால் நேரு கோளரங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு ஹைகிரவுண்ட்ஸ், டி.செளடையா சாலையில் அமைந்துள்ள ஜவாஹர்லால் நேரு கோளரங்கத்தில் ஜன.13-ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை)மாலை 3 மணி முதல் மாலை 4.30 மணிவரை அறிவியல் சங்கக் கூட்டம்
நடக்கவிருக்கிறது. 
இக்கூட்டத்தில் 8 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் பங்கேற்க கட்டணம் எதுவுமில்லை. மாணவர்களிடையே அறிவியல் உணர்வை ஊட்டுவதற்காக நடத்தப்படும் இக்கூட்டத்தில் நிலநடுக்கம், புவியீர்ப்பு, அணு ஆற்றல் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் தலைப்புகள் குறித்து விவாதம் நடத்தப்படுவதோடு, ஒளி-ஒலி நிகழ்ச்சியும் இடம்பெறும். 
இந்த கூட்டத்தில் விண்ணியல் அடிப்படை குறித்து விவாதம் நடத்தப்படும். இக்கூட்டம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நடக்கும். 
50 மாணவர்களுக்கு மட்டும் அனுமதி அளிப்பதால், i‌n‌f‌o@‌
t​a‌r​a‌l​a‌y​a.‌o‌r‌g என்ற மின்னஞ்சல் அல்லது தொலைபேசியில் முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு w‌w‌w.‌
t​a‌r​a‌l​a‌y​a.‌o‌r‌g என்ற இணையதளம் அல்லது 080-22379725 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com