பேருந்தில் மின்-பயணச்சீட்டு விநியோகிக்க திட்டம்

அரசுப் பேருந்தில் பயணிப்போருக்கு மின்-பயணச்சீட்டுகளை வழங்க பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.

அரசுப் பேருந்தில் பயணிப்போருக்கு மின்-பயணச்சீட்டுகளை வழங்க பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.
பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம், பெங்களூரில் தினமும் 6630 பேருந்துகளின் மூலம் 70 ஆயிரம் நடைகளில்  11.57கிமீ தொலைவுக்கு பயணக்கிறது. இப்பணியில் 34,253 ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் பெரும்பாலானோர் ஓட்டுநர்கள், நடத்துநர்களாக உள்ளனர். 
கடந்த சில ஆண்டுகளாக பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு மின்னணு பயணச்சீட்டு கருவிகள் வாயிலாக பயணச்சீட்டு வழங்கி வருகிறார்கள். தற்போதைய நிலையில், பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக்கழகம், தினசரி, மாத, ஆண்டு, மாணவர் பயண அட்டைகளை தொடர்ந்து காகிதங்களிலேயே வருகிறது. 
காகிதங்களுக்கு அதிகளவில் செலவாவதால், அதை தடுக்கும்பொருட்டு பயணச்சீட்டு வழங்க காகிதங்களின் பயன்பாட்டை குறைக்க பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக்கழகம் முற்பட்டுள்ளது. இதற்காக மின்-பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்க மாநகரப் போக்குவரத்துக்கழகம் திட்டம் வகுத்துள்ளது.
தற்போது பயன்பாட்டில் உள்ள மின்னணு பயணச்சீட்டு வழங்கல் கருவிகள் 3 ஆண்டுகளுக்கு முன்பு கொள்முதல் செய்யப்பட்டதால், அது இன்னும் 2 ஆண்டுகளுக்கு பயன்பாட்டில் இருக்கவிருக்கிறது. இந்த கருவிகள் காகித பயணச்சீட்டுகளை வழங்குவதோடு, பயண அட்டைகளின் செல்லுபடியையும் சோதிக்கவல்லது. இதை மாற்றி, ஸ்மார்ட் செல்லிடப்பேசிகளிலே பயண அட்டைகள் மற்றும் பயணச்சீட்டுகளைப் பெறும் முறையை அறிமுகம் செய்ய பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக்கழகம் முடிவுசெய்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் என்.வி.பிரசாத் கூறியது: எங்கள் பேருந்துகளில் இணையவழி பயணச்சீட்டு முறையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம், செல்லிடப்பேசி செயலி வழியாக பயணச்சீட்டுகளைப் பயணிகள் கொள்முதல் செய்யலாம். திரைப்படங்களுக்கு நுழைவுச்சீட்டுகளை வாங்குவது போல, பயணச்சீட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். இது செல்லுபடியாகத்தக்கதா என்பதை சோதித்தறிய மின்னணு பயணச்சீட்டு வழங்கல் கருவிகளில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது.மேலும் புதிய செல்லிடப்பேசி செயலியையும்  அறிமுகம்செய்ய வேண்டியுள்ளது. இதற்கு சிலகாலம் ஆகும் என்றார்.
போக்குவரத்துக் கழக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,அனைத்து பேருந்துகளிலும் புவிநிலைமுறை(ஜிபிஎஸ்)கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என்பதால், இதன் வழியாக செல்லிடப்பேசி செயலிகளில் பேருந்துகளின் நடமாட்டத்தை கண்டறியமுடியும். ஜிபிஎஸ் கருவிகளை தரமுயர்த்தும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. 
இப்பணி முடிந்ததும் செல்லிடப்பேசி செயலிவழியாக பயணிகள் மின்-பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். உபெர் அல்லது ஓலா கார்களுக்கு பணம்செலுத்துவது போல பேடிஎம் அல்லது இணையவழி வங்கிசேவைகள் மூலம் பயணச்சீட்டு கட்டணத்தை செலுத்தலாம். 
இதன்பேரில் க்யூஆர் கோட் வரும். இதை பயணச்சீட்டாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதை நடத்துநர் தனது மின்னணுபயணச்சீட்டு வழங்கல் கருவி வழியாக சோதித்துகொள்ளலாம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com