சுடச்சுட

  


  கோலார் மாவட்ட தேமுதிக சார்பில் கோலார் தங்கவயலில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
  கோலார் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) சார்பில், கோலார் தங்கவயலில் புதிய மேற்கு கில்பர்ட்ஸ் வட்டத்தில் சனிக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது. பெண்கள் வண்ணக் கோலங்கள் இட்டு பொங்கல் வைத்து, அப்பகுதி மக்களுக்கு வழங்கினர்.
  விழாவுக்கு தலைமை தாங்கிய கோலார் மாவட்டச் செயலர் ராஜேந்திரன் அப்பகுதி பெண்களுக்கு பொங்கல் பரிசாக புத்தாடைகளை வழங்கி பேசியது, கோலார் தங்கவயலில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா, ஒவ்வொரு பகுதியிலும் பட்டிமன்றம், கவியரங்கம், வீரவிளையாட்டுப் போட்டிகளான கபடி, சிலம்பாட்டம், மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் கலை நிகழ்ச்சிகள் என தமிழர்களின் கலை,கலாசாரங்களை பேணி வளர்க்கும் விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. தற்போது பொங்கல் விழா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கரைந்து போகிறது.
  இந்த போக்கை மாற்றியமைக்கும் பொருட்டு, தேமுதிக சார்பில் கடந்த 13 ஆண்டுகளாக பொங்கல் விழா தமிழர் பண்பாடு சார்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர் திருநாளை ஜாதி, மத பாகுபாடுகள் இன்றி அனைத்து தமிழர்களும் கொண்டாடி மகிழ வேண்டும். இது அறுவடை திருநாள். இயற்கை நமக்களித்த கொடைக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன் தான் பொங்கல் விழா. இயற்கையோடு இயைந்த தமிழர்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் அற்புத விழா பொங்கல் திருநாள் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai