சுடச்சுட

    

    சென்னை-பெங்களூரு விரைவுரயில் மைசூரு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரயில் எண்: 12609-சென்னை-பெங்களூரு விரைவுரயில் மைசூரு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரயிலின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
    அதன் விவரம்: ரயில் எண்: 12609-சென்னை-பெங்களூரு விரைவுரயில் ஜன. 15-ஆம் தேதி முதல் மைசூரு ரயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது. இதன்படி, இந்த ரயில் சென்னையில் இருந்து நண்பகல் 1.35 மணிக்குப் புறப்பட்டு, மாலை 6.05 மணிக்கு பெங்களூரு வந்தடையும். அங்கிருந்து மாலை 6.10 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் இரவு 11.30 மணிக்கு மைசூரு ரயில் நிலையம் சென்றடையும்.
    மறுமார்க்கத்தில், ரயில் எண்: 12610-பெங்களூரு-சென்னை விரைவு ரயில் ஜன. 16-ஆம் தேதி முதல் பெங்களூரு ரயில் நிலையத்துக்குப் பதிலாக மைசூரில் இருந்து புறப்படும். ரயில் எண்: 12610-மைசூரு-சென்னை விரைவு ரயில் மைசூரு ரயில் நிலையத்தில் இருந்து தினமும் காலை 4.45 மணிக்குப் புறப்பட்டு, அன்று காலை 7.45 மணிக்கு பெங்களூரு வந்தடையும். பெங்களூரில் இருந்து காலை 8.02 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், அன்று நண்பகல் 2.30 மணிக்கு சென்னை ரயில் நிலையம் சென்றடையும்.
    இந்த ரயில் இரு மார்க்கங்களிலும் பெங்களூரு-மைசூரு இடையே கெங்கேரி, ராமநகரம், சென்னப்பட்டணா, மத்தூர், மண்டியா, பாண்டவபுரா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai