சுடச்சுட

  


  பெங்களூரு பல்கலைக்கழகத்தில் முழுநேர மற்றும் பகுதிநேர விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  இதுகுறித்து பெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: பெங்களூரு பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக விஸ்வேஷ்வரா பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தகவல்தொடர்பு பொறியியல் துறையில் முழுநேர மற்றும் பகுதிநேர விரிவுரையாளர்களாக பணியாற்ற தகுதியான ஆள்கள் தேவைப்படுகிறார்கள்.
  2018-19-ஆம் கல்வியாண்டில் பிஇ, எம்இ (மின்னணுவியல், தகவல் தொடர்பியல்) போன்ற முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தும் தகுதி படைத்தவர்களிடம் இருந்து இப்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எம்இ, எம்டெக், பிஎச்டி போன்ற முதுநிலை பட்டப்படிப்பு படித்தோர், தொழில் மற்றும் ஆசிரியப் பணியில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  இப்பணியில் சேர ஆர்வமுள்ளோர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜன. 18-ஆம் தேதிக்குள் தலைவர், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறை, பல்கலைக்கழக விஸ்வேஷ்வரா பொறியியல் கல்லூரி, கே.ஆர்.சதுக்கம், பெங்களூரு-560001 என்றமுகவரிக்கு அனுப்பி வைக்கலாம். மேலும் விவரங்களுக்கு 080-22961358 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai