மாநகராட்சி நிலைக்குழுக்களின் தலைவர்கள் தேர்தல்: ஜன.17-இல் நடைபெறுகிறது

பெங்களூரு மாநகராட்சி நிலைக்குழுக்களின் தலைவர்கள் தேர்தல் வரும் ஜன. 17-ஆம் தேதி நடைபெறுகிறது.


பெங்களூரு மாநகராட்சி நிலைக்குழுக்களின் தலைவர்கள் தேர்தல் வரும் ஜன. 17-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூரு மாநகராட்சியில் வரி மற்றும் பொருளாதாரம், பொது சுகாதாரம், நகர திட்டம் மற்றும் வளர்ச்சிப் பணி, வார்டு அளவிலான பொதுப் பணிகள், பொதுக் கணக்கு, கல்வி, மேல்முறையீடு, தோட்டக்கலை, சந்தை, ஊழியர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம், பெரிய பொதுப் பணிகள், சமூகநலம் ஆகிய 12 நிலைக்குழுக்கள் உள்ளன. கடந்த டிச. 5-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், இக்குழுக்களுக்கு தலா 11 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இக்குழுக்களின் தலைவர்கள் தேர்தல் வரும் ஜன. 17-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாமன்றக்கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. நிலைக்குழுக்களின் உறுப்பினர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com