கர்நாடகத்தில் பாஜகவின் ஆட்சிக் கனவு பலிக்காது

கர்நாடகத்தில் ஆட்சியமைக்கும் பாஜகவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றார் அந்த மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா.

கர்நாடகத்தில் ஆட்சியமைக்கும் பாஜகவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றார் அந்த மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா.
பெங்களூரில் புதன்கிழமை காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர் கே.சி.வேணுகோபாலைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மாநிலத்தில் காங்கிரஸ், மஜத கூட்டணி அரசை கவிழ்த்துவிட்டு, பாஜக ஆட்சியைப் பிடிக்க பகல் கனவு காண்கிறது. அவர்கள் கனவு ஒருபோதும் பலிக்காது என்றாலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பாஜகவுக்கு இழுக்கும் முயற்சியை முறியடிக்கும் வகையிலான நடவடிக்கைகளை நாங்கள்  தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். 
பாஜகவினர் அபரேஷன் கமலா திட்டத்தைச் செயல்படுத்த முயற்சிக்கின்றனர் என்பதற்காக, நாங்களும் அதுபோன்று எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம். பாஜகவினருக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. எனவேதான் பின்கதவு வழியாக ஆட்சியைப் பிடிக்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். 
மாநில பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு முதல்வராகும் ஆசை வெகுநாளாக உள்ளது. இதன்காரணமாக எந்த வழியிலாவது காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏக்களை ஆசை வார்த்தைக் கூறி அக்கட்சிக்கு இழுக்க முயற்சி மேற்கொண்டுள்ளார். மும்பைக்குச் சென்றுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விரைவில் பெங்களூருக்குத் திரும்புவார்கள். அவர்கள் யாரும் பாஜகவில் இணைய மாட்டார்கள் என்றார்.
கோலார் தங்கவயலில்
 சமத்துவப் பொங்கல்
கோலார்தங்கவயல், ஜன.16:  கோலார் தங்கவயலில் அனைத்து சமுதாய மக்கள் ஒன்றுகூடி சமத்துவப் பொங்கல் கொண்டாடினர்.
கோலார் தங்கவயல், ஆண்டர்சன் பேட்டையில் உள்ள லூர்துநகரில் புதன்கிழமை உலக அமைதியை காக்கவும், தீவிரவாதம் ஒழிப்படவும் வேண்டி அனைத்து சமுதாயத்தினரும் கூடி சமத்துவப் பொங்கல் கொண்டாடினார்கள். லூர்துமாதா சிற்றாலய வளாகத்தில் நகர்மன்ற உறுப்பினர் ஸ்டேன்லி தலைமையில் ஹிந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களைச் சேர்ந்த மக்கள் இதில் கலந்து கொண்டனர். 
புதுப்பானையில் பொங்கலிட்டு பொதுமக்களுக்கு வழங்கினர். அப்போது கூடியிருந்த மக்கள் பொங்கலோ பொங்கல் என்று உற்சாக முழக்கமிட்டனர். இந்த விழாவில் ஆண்டர்சன்பேட்டை வார்டு நகர்மன்ற உறுப்பினர் செல்வி, அப்பகுதி மக்களுக்கு பொங்கலை வீட்டில் கொண்டாடுவதற்கு அரிசி, வெல்லம், நல்லெண்ணெய், கரும்பு ஆகியவற்றை பொங்கல் பரிசாக வழங்கினர். 
நிகழ்ச்சியில் லெனின், பிரபாகரன், ஜான், டிசல்வா, பிரான்சிஸ், பிரித்தா, மிலிந்தர், வேளாங்கன்னி, சந்திரா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com