குடியரசுத் தின மலர்க் கண்காட்சி நாளை தொடக்கம்

பெங்களூரில் குடியரசுத் தின மலர்க் கண்காட்சி ஜன.18-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

பெங்களூரில் குடியரசுத் தின மலர்க் கண்காட்சி ஜன.18-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை தோட்டக்கலைத் துறை இயக்குநர் ஒய்.எஸ்.பாட்டீல், செய்தியாளர்களிடம் கூறியது: 
கர்நாடக தோட்டக்கலைத் துறை மற்றும் மைசூரு தோட்டக்கலை சங்க நிர்வாகக் குழு சார்பில், பெங்களூரு லால் பாக்கில் குடியரசுத் தின மலர்க் கண்காட்சி ஜன.18-ஆம் தேதி முதல் 27ஆம் தேதிவரை 10 நாள்கள் நடக்கவிருக்கின்றன. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி மலர்க் கண்காட்சியை பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
ஜன.18-ஆம் தேதி காலை 11 மணிக்கு லால் பாக்கில் உள்ள கண்ணாடி மாளிகையில் குடியரசுத் தினமலர்க் கண்காட்சியை தோட்டக்கலைத் துறை அமைச்சர் எம்.சி.மனகுலி தொடக்கிவைக்கிறார். மேயர் கங்காம்பிகே உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். கண்காட்சியில் 75-க்கும் அதிகமான வகையிலான மலர்கள் இடம்பெறவுள்ளன. 
கண்காட்சியைக் காண 5 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மலர்க் கண்காட்சியில் காந்திஜியின் சிலை, சபர்மதி ஆசிரமம், ராஜ்காட் உள்ளிட்டவை இடம்பெறும். கண்காட்சியைக் காண பெரியவர்களுக்கு ரூ. 70, சிறுவர்களுக்கு ரூ. 20 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக் கண்காட்சி தினமும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை, பார்வையாளர்களுக்காகத் திறக்கப்பட்டிருக்கும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com