ராணுவத்தில் தொழில்பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ராணுவத்தில் தொழில்பயிற்சியாளர்பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ராணுவத்தில் தொழில்பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து 515 ராணுவத்தளவாட பட்டறை (515 அழ்ம்ஹ் ஆஹள்ங் ரர்ழ்ந்ள்ட்ர்ல்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூரு, அல்சூரில் உள்ள 515 ராணுவத்தளவாட பட்டறையில் ஃபிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், வெல்டர், மெஷினிஸ்ட் கிரைண்டர், மெக்கானிக் மெஷின்டூல் பராமரிப்பு, டூல் அண்ட் டை, எலெக்ட்ரீஷியன், ஷீட்மெட்டல் வேலையாள் போன்ற வேலைகளுக்கு காலியாக உள்ள 71 தொழில்பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணியில் சேர ஆர்வமுள்ள, தொழில்பயிற்சி மைய (ஐடிஐ) சான்றிதழ் (என்சிவிடி பாடத்திட்டம்) பெற்றுள்ளோர் கட்டளை அதிகாரி மற்றும் மேலாண் இயக்குநர், 515 ராணுவத்தளவாட பட்டறை, அல்சூரு, பெங்களூரு-560008 என்ற முகவரிக்கு தன்விவரங்களுடன் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும்.  w‌w‌w.​a‌p‌p‌r‌e‌n‌t‌i​c‌e‌s‌h‌i‌p.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம். ஷீட்மெட்டல் வேலையாள் பணிக்கு 2 ஆண்டுகள் பயிற்சி வழங்கப்படும். இதர வேலைகளுக்கு ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சி பெறுவோருக்கு சட்டவிதிகளின்படி ஊக்குவிப்பு ஊதியம் வழங்கப்படும். நேர்காணல் அல்லது தேர்வு எழுத வரும் போது அதற்கான பயணப்படி, உணவுப்படி எதுவும் வழங்கப்பட மாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com