"அன்பு மட்டுமே அவரது அடையாளம்'

ஜாதி, மதம், மொழிகளைக் கடந்து அனைவரிடத்திலும் அன்பு செலுத்துவது மட்டுமே சிவக்குமார சுவாமிகளின் அடையாளம்

ஜாதி, மதம், மொழிகளைக் கடந்து அனைவரிடத்திலும் அன்பு செலுத்துவது மட்டுமே சிவக்குமார சுவாமிகளின் அடையாளம் என்றார் கர்நாடக காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தொழிலாளர் பிரிவு தலைவருமான எஸ்.எஸ்.பிரகாசம்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தனது 13-வயதில் ஆன்மிகப் பணியைத் தொடங்கியவர் சிவக்குமார சுவாமிகள். அவரின் மறைவு கர்நாடகத்திற்கு மட்டுமின்றி சர்வதேசத்துக்கும் இழப்பு ஆகும். ஜாதி, மதம், மொழி கடந்து அனைவரிடம் அன்பு பாராட்டிய அவர், எளிமையிலும், மக்கள் மீது அன்பு காட்டுவதிலும் சிறந்து
விளங்கினார். 
ஏழை மாணவர்களுக்கு உணவு, தங்க இடம் அளித்து, கல்வியை புகட்டியவர். திருவள்ளுவர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள அவருக்கு அழைப்பு விடுக்கச் சென்றப்போது, திறக்குறள் நூலை வாங்கி பார்த்த அவர், திருக்குறள், திருவள்ளுவர் என்பதனை எழுத்துக் கூட்டி படித்தார். உங்களுக்கு தமிழ் தெரியுமா என்று கேட்ட போது, கொஞ்சம், கொஞ்சம் தெரியும் என்று கன்னடத்தில் கூறினார். இந்துகள் மட்டுமின்றி அனைத்து மதத்தினருக்கு பேரிழப்பாகும் என்றார்.  

சித்தகங்கா மடத்தில் 10 லட்சம் பேருக்கு உணவு
சிவக்குமார சுவாமிகளின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த 10 லட்சம் பேருக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு வழங்கப்பட்டது. 
கர்நாடக மாநிலம், தும்கூரு சித்தங்கா மடத்தின் பீடாதிபதி சிவக்குமார சுவாமிகள் திங்கள்கிழமை 
லிங்கைக்கியமானார். இதையடுத்து, அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக மடத்தில் வைக்கப்பட்டது. ஏழைகள் அனைவருக்கும் உணவும், கல்வியும் வழங்க வேண்டும் என்பதில் சிவக்குமார சுவாமிகள் உறுதியாக இருந்தார். எனவே, அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த 10 லட்சம் பேருக்கு மடத்தின் சார்பில் சிற்றுண்டி, உணவு வழங்கப்பட்டது. சிவக்குமார சுவாமிகளின் இறுதி சடங்கையொட்டி, தும்கூரில் இலவச பேருந்து சேவையும், பெங்களூரிலிருந்து சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. சிவக்குமார சுவாமிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தும்கூரில் செவ்வாய்க்கிழமை வர்த்தகர்கள் தாமாக முன்வந்து கடை உள்ளிட்டவைகளை அடைத்தனர். இறுதிச் சடங்கில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் கலந்து கொள்ள முடியாத சூழலில், அவருக்குப் பதிலாக மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், சதானந்த கெளடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
திங்கள்கிழமை பிற்பகல் முதல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்ட சிவக்குமார சுவாமிகளின் உடலுக்கு செவ்வாய்க்கிழமை மாலை வரை வரிசையில் அமைதியாகவும், திரளாகவும் வந்து பொதுமக்கள்  அஞ்சலி செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com