காங்கிரஸ் கட்சியிலிருந்து  கம்பளி தொகுதி எம்எல்ஏ கணேஷ் நீக்கம்

காங்கிரஸ் கட்சியிலிருந்து கம்பளி தொகுதி எம்எல்ஏ கணேஷ் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து கம்பளி தொகுதி எம்எல்ஏ கணேஷ் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்கவும், காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜகவுக்கு இழுக்கவும் அக் கட்சியினர் மேற்கொண்டுள்ள முயற்சியைத் தடுக்கும் வகையில், பெங்களூரு அருகே உள்ள பிடதியில் உள்ள ஈகிள்டன் கேளிக்கை விடுதியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை நள்ளிரவு பல்லாரி மாவட்டம், விஜயநகரா தொகுதியைச் சேர்ந்த ஆனந்த்சிங்கிற்கும், கம்பளி தொகுதியைச் சேர்ந்த கணேஷ் ஆகியோரிடையே ஏற்பட்ட தகராறு மோதலில் முடிந்தது.
இதில் ஆனந்த்சிங்கிற்கு தலை, கண், வயிறு, தோள் ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். காங்கிரஸ் எம்எல்ஏக்களிடையே ஏற்பட்ட கைகலப்பு மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆனந்த்சிங் எனது அண்ணனை போன்றவர் அவரை நான் தாக்கவில்லை என்று கணேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 
ஆனாலும், ஆனந்த்சிங்கைத் தாக்கியதற்காக காங்கிரஸ் கட்சியின் அடைப்படை உறுப்பினர் பதவியிலிருந்து கணேஷை நீக்குவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ் அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஆனந்த்சிங் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கணேஷ் மீது போலீஸார் கொலை முயற்சி வழக்கைப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் கணேஷ் தலைமறைவாகியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com