பிரியங்காவின் அரசியல் பிரவேசம்: முதல்வர் குமாரசாமி வரவேற்பு
By DIN | Published On : 24th January 2019 02:20 AM | Last Updated : 24th January 2019 02:20 AM | அ+அ அ- |

பிரியங்கா காந்தியின் முழுநேரஅரசியல் பிரவேசத்தை முதல்வர் குமாரசாமி வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பிரியங்கா காந்தியின் முழுநேர அரசியல் பிரவேசத்தை மனதார வரவேற்கிறேன். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி, உத்தரபிரதேச கிழக்குப்பகுதியின் மக்களவைத் தேர்தல் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அவருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
பிரியங்கா காந்தியின் அரசியல்பிரவேசத்தை முன்னாள் முதல்வர் சித்தராமையா, துணைமுதல்வர் ஜி.பரமேஸ்வர், காங்கிரஸ் மாநில செயல்தலைவர் ஈஸ்வர்கண்ட்ரே உள்ளிட்டோர் வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.