கோயிலில் வழங்கப்பட்ட நஞ்சு உணவு: மேலும் ஒருவர் சாவு
By DIN | Published On : 28th January 2019 03:50 AM | Last Updated : 28th January 2019 03:50 AM | அ+அ அ- |

கோயிலில் வழங்கப்பட்ட நஞ்சு உணவை சாப்பிட்ட மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கர்நாடக மாநிலம், சாமராஜ்நகர் மாவட்டத்தின் சுலவாடி கிராமத்தில் உள்ள மாரம்மா கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் நஞ்சு கலந்திருந்ததால், அதை உண்ட 100-க்கும் மேற்பட்டோரில் 17 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிக்பளாப்பூர் மாவட்டத்தின் சிந்தாமணியில் உள்ள கங்கம்மா கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜன. 25) இரவு பக்தர்களுக்கு வழங்கப்பட்ட உணவை (பிரசாதம்)உட்கொண்ட கவிதா(28) என்ற பெண் சிகிச்சை பலனில்லாமல் சனிக்கிழமை காலை உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரசம்மா (56) என்பவர் சிகிச்சை பலனின்றி இரவு உயிரிழந்தார். கோயில் உணவை உட்கொண்ட மேலும் 10 பேருக்கு வாந்தி, வயிற்றுக் கோளாறுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வழக்குப் பதிவுசெய்த போலீஸார், உணவைத் தயாரித்த லட்சுமி, அமராவதி ஆகிய 2 பெண்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.