பள்ளிக் கல்வித் துறை ஆணையராக ஜெகதீஷ் நியமனம்
By DIN | Published On : 04th July 2019 10:02 AM | Last Updated : 04th July 2019 10:02 AM | அ+அ அ- |

கர்நாடக பள்ளிக் கல்வித் துறையின் புதிய ஆணையராக ஜெகதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை ஆணையராகப் பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரி பி.சி.ஜாபர், சில நாள்களுக்கு முன்பு அரசின் நிதித் துறை(செலவினம்)செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் காலியாக இருந்த இப்பணியிடத்துக்கு ஊழியர் மற்றும் நிர்வாகச் சீர்த்திருத்தத் துறை(தேர்தல்) கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாகப் (செலவின கண்காணிப்பு) பணியாற்றி வந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் ஜே.ஜி.ஜெகதீஷ், நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல ஊழியர் மற்றும் நிர்வாகச் சீர்த்திருத்தத் துறை(தேர்தல்)கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி-3 ஆக பணியாற்றி வந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி கே.என்.ரமேஷ், அப்பணியில் இருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டு சுற்றுலாத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது.