இசை, நாட்டியப் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு
By DIN | Published On : 05th July 2019 08:10 AM | Last Updated : 05th July 2019 08:10 AM | அ+அ அ- |

இசை மற்றும் நாட்டியப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கர்நாடக இசைமற்றும் நாட்டிய அகாதேமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கர்நாடக இசை மற்றும் நாட்டிய அகாதெமியின் சார்பில் 2019-20-ஆம் ஆண்டில் கல்வி உதவித்தொகைக்குப் பதிலாக மாவட்டந்தோறும் அகாதெமியின் சார்பில் ஆசிரியர்களின் வழியாக கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை, மெல்லிசை, நாட்டியம், கதாகாலட்சேபம் போன்ற இசை, நாட்டியக்கலைகளை கற்க ஆர்வமாக இருக்கும் மாணவர்கள் மற்றும் ஏற்கெனவே இசை, நாட்டிய பயின்று கூடுதலாக கற்கவிரும்பும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 14 முதல் 26 வயதுக்குட்பட்டோர் இப்பயிற்சிக்கு ஜூலை 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். வெளிமாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட கன்னடம் மற்றும் பண்பாட்டுத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 080-22215072. www.karnatakasangeethanrityaacademy.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.