ஜூலை 27-இல் கணிதப் பயிலரங்கு
By DIN | Published On : 05th July 2019 08:10 AM | Last Updated : 05th July 2019 08:10 AM | அ+அ அ- |

கர்நாடக மாநில அறிவியல் பேரவை சார்பில் ஜூலை 27-ஆம் தேதி முதல் நடக்கவிருக்கும் கணிதப் பயிலரங்கில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
இதுகுறித்து கர்நாடக மாநில அறிவியல் பேரவை(கேஆர்விபி)வெளியிட்ட செய்திக்குறிப்பு: கர்நாடக மாநில அறிவியல் பேரவையின் சார்பில் பெங்களூரு, பனசங்கரி 2-ஆவது தடம், 21-ஆவது முக்கியசாலையில் உள்ள அறிவியல் மாளிகையில் ஜூலை 27 முதல் 29-ஆம் தேதிவரையில்'ஆர்வமுள்ள உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்காக மாநில அளவிலான சிறப்பு கணிதப்பயிலரங்கம்' என்ற தலைப்பிலான கணிதப்பயிலரங்கம் நடக்கவிருக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும் மாநிலத்தின் அனைத்து உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களிடம் இருந்து ஜூலை 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை வரவேற்கிறோம். இதில் பங்கேற்க கட்டணம் எதுவுமில்லை. 3 நாட்களும் தங்கியிருக்க விடுதி, உண்ண உணவு அளிக்கப்படவிருக்கிறது.மேலும் பயிலரங்கில் கலந்துகொள்வோர் பணி நிமித்தமாக பங்கேற்றதாக சான்றிதழ் அளீக்கப்படும். மேலும் விவரங்களுக்கு www.krvp.org என்ற இணையதளம் அல்லது 080-26718939, 9901852150, 9483549159 என்ற செல்லிடப்பேசி எண்ணை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.