சுடச்சுட

  

  கடவுள் ஆசி இருக்கும் வரை முதல்வராக குமாரசாமி தொடருவார் என்று மாநில பொதுப் பணித் துறை அமைச்சர் எச்.டி.ரேவண்ணா தெரிவித்தார்.
  மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வந்த பொதுப்பணித் துறை அமைச்சர் எச்.டி.ரேவண்ணா, கோயிலில் 20 நிமிடங்கள் சிறப்புபூஜை செய்து வழிபட்டார். முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து காப்பாற்ற வேண்டும் என பூஜை செய்ததாகக் கூறப்படுகிறது. 
  பின்னர், செய்தியாளர்களிடம் எச்.டி.ரேவண்ணா கூறியது: கடவுளின் ஆசி இருக்கும் வரை கர்நாடகத்தின் முதல்வராக குமாரசாமி தொடர்வார். சாமுண்டீஸ்வரி தாயின் ஆசி முதல்வர் குமாரசாமிக்கு இருக்கிறது. எனவே, எல்லோரும் கூறுவது போல முதல்வர் குமாரசாமிக்கும், மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கும் எந்த தொந்தரவும் இல்லை. 
  பாஜக தலைவர்கள் கே.எஸ்.ஈஸ்வரப்பா, முரளிதர்ராவ் ஆகியோரை மஜத அமைச்சர் சா.ரா.மகேஷ் சந்தித்திருப்பதில் சிறப்பொன்றுமில்லை. பாஜகவுடன் மஜத கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை. அனைத்து பிரச்னைகளும் தற்போது கடவுள் முன் உள்ளது. சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் சுமுகமாக நடைபெறும் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai