எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வு முடிவுகள்: 42.47சதவீத மாணவர்கள் தேர்ச்சி

கர்நாடக எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வில் 42.47 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கர்நாடக எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வில் 42.47 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது குறித்து கர்நாடக மாநில மேல்நிலைக் கல்வி தேர்வு வாரியத்தின் இயக்குநர் வி.சுமங்களா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிகழாண்டு ஜூன் 21 முதல் 28-ஆம் தேதி வரை 655
மையங்களில் நடந்த தேர்வில் 1,92,181 மாணவர்கள் மறுத்தேர்வு எழுதினர். இதில் மறுத்தேர்வர்கள் 1,74,807, தனித்தேர்வர்கள் 17,373 பேர். 
ஜூலை 6 முதல் 10-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் உள்ள 10 கல்வி மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 53 மையங்களில் 15,464 ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதன் முடிவில் 81,614 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது சராசரியாக 42.47 சதவீதமாகும். மறுத்தேர்வர்கள், தனித்தேர்வர்கள் உள்பட 2019-ஆம் ஆண்டில் மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில்நடந்த
பொதுத்தேர்வு மற்றும் துணைத்தேர்வில் சராசரியாக 58.08 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டின் துணைத் தேர்வில் தேர்ச்சி விகிதம் 40.69 சதவீதமாக இருந்தது. இத்துடன் ஒப்பிட்டால் நிகழ் கல்வியாண்டுக்கான துணைத்தேர்வில் 1.78 சதவீத தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 
மாணவிகள் சாதனை: மாநிலம்முழுவதும் தேர்வெழுதிய 1,22,827 மாணவர்களில் 48,553 பேரும்(39.53%), 69,354 மாணவிகளில் 33,061 பேரும்(47.67%)வெற்றி பெற்றுள்ளனர். நகரப் பகுதியை சேர்ந்த 98,442
மாணவர்களில் 40,983 பேரும்(41.63%), கிராமப் பகுதியை சேர்ந்த 93,739 மாணவர்களில் 40,631 பேரும்(43.34%) தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசுப்பள்ளி மாணவர்களில் 40.95 சதவீதம், அரசு மானியம்பெறும்
பள்ளி மாணவர்களில் 42.27 சதவீதம், அரசு மானியம் பெறாத மாணவர்களில் 44.96 சதவீதம் பேரும் தேர்வில் வெற்றிவாகைச்
சூடியுள்ளனர்.
மாற்றுத் திறனாளிகள் தேர்ச்சி: காதுகேளாமை குறைபாடுள்ள 356 மாணவர்களில் 130(36.52%)பேரும், உடல் ஊனமுற்ற 363 மாணவர்களில் 125(34.44%)பேரும், கண்பார்வையற்ற 50 மாணவர்களில் 27
பேரும்(54%), இதர குறைபாடுள்ள 262 மாணவர்களில் 103 பேரும்(39.31%), கற்றலில் குறைபாடுள்ள 164 மாணவர்களில் 61 பேரும்(37.20%), பல் குறைபாடுள்ள 55 மாணவர்களில் 18 பேரும்(32.52) தேர்ச்சி
பெற்றுள்ளனர்.
பயிற்று மொழி வாரியக தேர்ச்சி விகிதம்: கன்னட பயிற்றுமொழியில் தேர்வெழுதிய 1,30,123 மாணவர்களில் 53,339(40.99%) பேரும், ஆங்கில பயிற்றுமொழியில் தேர்வெழுதிய 50,257 மாணவர்களில்
22,095(43.96%)பேரும், உருது பயிற்று மொழியில் தேர்வெழுதிய 8,443 மாணவர்களில் 4,716(55.86%)பேரும், மராத்தி பயிற்று மொழியில் தேர்வெழுதிய 3,118 மாணவர்களில் 1,374(44.07%)பேரும், தெலுங்கு
பயிற்றுமொழியில் தேர்வெழுதிய 113 மாணவர்களில் 47(41.59%), தமிழ் பயிற்று மொழியில் தேர்வெழுதிய 54 மாணவர்களில் 13(24.07%), ஹிந்தி பயிற்று மொழியில் தேர்வெழுதிய 73 மாணவர்களில்
30(41.10%)பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 37 மாணவர்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பெங்களூரில் 1, தர்வாடில் 11, சிக்கோடியில் 5,
பெலகாவியில் 19, பாகல்கோட்டில் 1 மாணவர்கள் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்.   
மறு மதிப்பீட்டுக்கான விண்ணப்பம்: பள்ளிகளில் சனிக்கிழமை(ஜூலை 13)தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. விடைத்தாள் நகல் பெற ஜூலை 15 முதல் 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் கிடைத்த
7 நாள்களில் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீட்டுக்கு ஜூலை 15 முதல் 24-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது.
விடைத்தாள் நகல்பெற ஒரு பாடத்துக்கு ரூ.405, மறு மதிப்பீட்டுக்கு ஒரு பாடத்துக்கு ரூ.80 கட்டணம் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல், மறுமதிப்பீடுக்கான விண்ணப்பங்களை எல்லா பள்ளிகளிலும்
வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  ‌w‌w‌w.‌k‌s‌e‌e​b.‌k​a‌r.‌n‌i​c.‌i‌n என்ற இணையதளம் மூலமும் மறுமதிப்பீடு, விடைத்தாள் நகக்கு விண்ணப்பிக்கலாம்.
பள்ளிகளில் இன்று வெளியீடு: கர்நாடக எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வு முடிவுகள் பள்ளிகளில் சனிக்கிழமை வெளியிடப்படுகிறது.
2018-19-ஆம் கல்வியாண்டுக்கான கர்நாடக எஸ்எஸ்எல்சி துணைத்தேர்வுகள் ஜூன் 21 முதல் ஜூன் 28-ஆம் தேதிவரை நடந்தது. இந்த துணைத்தேர்வின் முடிவுகள் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு
இணையதளங்களில் வெளியிடப்பட்டது. ஜூலை 13-ஆம் தேதி(சனிக்கிழமை) சம்பந்தப்பட்ட பள்ளிகளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை  w‌w‌w.‌k‌s‌e‌e​b.‌k​a‌r.‌n‌i​c.‌i‌n, ‌h‌t‌t‌p://‌k​a‌r‌r‌e‌s‌u‌l‌t‌s.‌n‌i​c.‌i‌n
 ஆகிய இணையதளங்களில் காணலாம்.

கடந்த 9 ஆண்டுகளில் தேர்ச்சி விகிதம்
ஆண்டு     தேர்ச்சி விகிதம்
1. 2011    36.40%
2. 2012    45.35%
3. 2013    45.24%
4. 2014    47.08%
5. 2015    40.83%
6. 2016    26.07%
7. 2017    50.81%
8. 2018    40.69%
9. 2019    42.47%
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com