சுடச்சுட

  

  அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சீரடி சாய்பாபா கோயிலில் வழிபாடு

  By DIN  |   Published on : 14th July 2019 04:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  மும்பையில் தங்கியிருக்கும் காங்கிரஸ், மஜதவைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர் சீரடி சாய்பாபா கோயிலில் வழிபாடு நடத்தியுள்ளனர்.
  முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசின் மீது அதிருப்தி அடைந்துள்ள காங்கிரஸ், மஜதவை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் தங்கள்பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.  இவர்களில்,  காங்கிரசைச் சேர்ந்த பிரதாப் கெளடா பாட்டீல்,  பைரதி பசவராஜ், பி.சி.பாட்டீல், ரமேஷ் ஜார்கிஹோளி,  சிவராம் ஹெப்பார்,  எஸ்.டி.சோமசேகர், மகேஷ் குமட்டஹள்ளி, மஜதவை சேர்ந்த கே.கோபாலையா,  எச்.விஸ்வநாத், கே.சி.நாராயண கெளடா, சுயேச்சைகளான எச்.நாகேஷ், ஆர்.சங்கர் ஆகிய 12 எம்எல்ஏக்களும் மும்பையில் உள்ள ரேனைசன்ஸ் நட்சத்திர விடுதியில் ஜூலை 6-ஆம் தேதிமுதல் தங்கியுள்ளனர். மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை சென்று திரும்பிய எம்எல்ஏக்கள்,  மகாராஷ்டிர மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் சீரடி நகரில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு சனிக்கிழமை சென்றனர்.  தனியார் விமானத்தில் சீரடிக்குச் சென்ற எம்எல்ஏக்கள் சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். 11 நாட்கள் நடக்கவிருக்கும் கர்நாடக சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 12-ஆம் தேதி தொடங்கியிருந்தாலும்,  மும்பையில் தங்கியிருக்கும் எம்எல்ஏக்கள் யாரும் பெங்களூரு திரும்பவில்லை.  தங்கள் ராஜிநாமா கடிதங்களை அங்கீகரிக்க பேரவைத் தலைவருக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கின் அடுத்த விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு (ஜூலை 16) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதுவரை மும்பையில் தங்கியிருக்க முடிவுசெய்துள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள்,  முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்யவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்வார்களா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.  
  கர்நாடக சட்டப்பேரவையில் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க ஜூலை 17-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முதல்வர் குமாரசாமி திட்டமிட்டுள்ளதாகக்
  கூறப்படுகிறது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai