சுடச்சுட

  


  தென் மாநிலங்களின் திமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு புகழஞ்சலி கூட்டம் நடத்தப்படுகிறது.
  இது குறித்துகர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  கர்நாடகம்,  ஆந்திரம்,  கேரளம்,  மகாராஷ்டிர மாநிலங்களின் திமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு புகழஞ்சலி கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.  
  இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி, கேரள மாநில திமுக பொறுப்பாளர் முருகேசன்,  மகாராஷ்டிர மாநில திமுக பொறுப்பாளர் மீரான் ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் கேட்டுக்கொண்டோம்.  இந்த அழைப்பை மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டுள்ளார்.  இந்த கூட்டம் செப்.15-ஆம் தேதிக்குப் பிறகு கேரள மாநிலத்தில் நடக்கவிருக்கிறது. இக் கூட்டத்தில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai