சுடச்சுட

  

  மைசூரு தமிழ்ச் சங்கத்துக்கு புதிய ஆட்சிமன்றக் குழு தேர்வு

  By DIN  |   Published on : 14th July 2019 04:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  மைசூரு தமிழ்ச் சங்கத்துக்கு புதிய ஆட்சிமன்றக் குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  மைசூரு தமிழ்ச் சங்கத்தின் 2019-22-ஆம் ஆண்டுகளின் பருவத்திற்குரிய ஆட்சிமன்றக் குழு தேர்வு சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை தேர்தல் பொறுப்பாளர் இரங்கதாமையா தலைமையில் நடைபெற்றது.  இக் கூட்டத்தில் மைசூரு தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிமன்றக் குழுவுக்கு புதிய நிர்வாகிகளாக 9 பேர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதை தேர்தல் பொறுப்பாளர் இரங்கதாமையா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
  அதன் விவரம் வருமாறு: தலைவர்- கு.புகழேந்தி, பொதுச் செயலாளர்-வெ.இரகுபதி, பொருளாளர்-கடலாடி எஸ்.துரை,  துணைத் தலைவர்கள்-ஆர்.கர்ணன், சூர்யா கணேஷ், இணைச் செயலாளர்கள்-ஆனந்தமுருகன், பக்ரூதின் அலி அகமது, ராஜூ, அமுதா பிரசாத். 
  புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 14)காலை 10 மணிக்கு நடைபெறும் மைசூரு தமிழ்ச்சங்க பொதுக்குழுக் கூட்டத்தில்  அறிமுகப்படுத்தப்பட உள்ளனர்.  மைசூரு, இந்திராநகர், மானசரா சாலையில் உள்ள வெள்ளாள முதலியார் சங்க வளாகத்தில் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது என்று மைசூரு தமிழ்ச்சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai