காவலர்களுக்கு 12.5 சதவீத ஊதிய உயர்வு

கர்நாடகத்தில் அவுராத்கர் அறிக்கையை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதையடுத்து காவலர்களுக்கு 12.5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.


கர்நாடகத்தில் அவுராத்கர் அறிக்கையை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதையடுத்து காவலர்களுக்கு 12.5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.
கர்நாடகத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற போது, ஊதிய உயர்வு கேட்டு போலீஸார் போராட முடிவு செய்தனர். இதையடுத்து மூத்த போலீஸ் அதிகாரி அவுராத்கர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.இந்த குழு, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பரிசீலித்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என போலீஸார் வலியுறுத்தினர். இந்த நிலையில் அவுராத்கர் அறிக்கையை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் பணியாற்றிவரும் போலீஸாருக்கு 12.5 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது. 
அதன்படி காவலர்களுக்கு ரூ. 23,500 முதல் ரூ. 47,650 வரை ஊதிய உயர்வு கிடைக்க உள்ளது. தலைமைக் காவலர்களுக்கு ரூ. 23,650 முதல் ரூ. 52,650 வரை ஊதிய உயர்வு கிடைக்க உள்ளது. காவல் உதவி ஆய்வாளர்களுக்கு ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 58,250 வரையும், காவல் ஆய்வாளர்களுக்கு ரூ. 43,100 முதல் ரூ. 83,900 வரையும், காவல் கண்காணிப்பாளர்களுக்கு ரூ. 70,850 முதல் ரூ. 1.07 லட்சம் வரை ஊதிய உயர்வு கிடைக்க உள்ளது. ஊதிய உயர்வு ஆக. 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com