இன்று குடிநீர் குறைதீர் முகாம்
By DIN | Published On : 19th July 2019 02:12 AM | Last Updated : 19th July 2019 02:12 AM | அ+அ அ- |

பெங்களூரு நகர கிழக்கு மூன்றாம் துணை மண்டலத்தில் வெள்ளிக்கிழமை குடிநீர் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிழக்கு மூன்றாம் துணைமண்டலத்தில் உள்ள கே.ஆர்.புரம், பசவனபுரா, தேவசந்திரா, ராமமூர்த்திநகர், விஜினாபுரா, ஹொரமாவு மற்றும் அதை சுற்றுயுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் 11 மணிவரை குடிநீர் குறைத்தீர் முகாம் துணை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
தண்ணீர் ரசீது, குடிநீர் விநியோகத் தாமதம், கழிவுநீர் இணைப்பு மற்றும் வியாபார இணைப்புகள் குடியிருப்பு இணைப்புகளாக மாற்றுவது போன்ற குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இதுகுறித்து 25663688 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.