பகுதிநேர விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 19th July 2019 02:13 AM | Last Updated : 19th July 2019 02:13 AM | அ+அ அ- |

பெங்களூரு மத்திய பல்கலைக்கழகத்தில் பகுதிநேர விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்துபெங்களூரு மத்திய பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூரு மத்திய பல்கலைக்கழகத்தின் கன்னடம், ஆங்கிலம், உலக மொழிகள், பொருளாதாரம், வரலாறு, அரசியல் அறிவியல், சமூகவியல், சமூகப்பணி, தத்துவம், வேதியியல், உயிரிவேதியியல், தாவர அறிவியல், விலங்கு அறிவியல், கணிதம், இயற்பியல், அழகியல் மற்றும் ஆடை வடிவமைப்பு, வெகுமக்கள் தொடர்பு மற்றும் ஊடகவியல், நிதிமற்றும் கணக்கியல், பன்னாட்டு வணிகம், பயணம்மற்றும் சுற்றுலா துறைகளில் பகுதிநேர விரிவுரையாளர்களாகப் பணியாற்ற தகுதியான ஆள்கள் தேவைப்படுகிறார்கள்.
குறிப்பாக எம்.காம்., எம்.பி.ஏ. போன்ற முதுநிலைப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தும் தகுதிப்படைத்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேசிய தகுதித்தேர்வு, மாநில தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றோர், வணிகப்படிப்பில் முதுநிலைப் பட்டப்படிப்பு படித்தோர்,ஆசிரியர் பணியில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இப்பணிக்கு தேவையான கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்கள் குறித்து இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். நிறைவு செய்த விண்ணப்பங்களை தலைவர், சம்பந்தப்பட்ட துறைகள்,சென்ட்ரல் கல்லூரி வளாகம், பெங்களூரு-560001 என்ற முகவரிக்கு ஜூலை 22-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.