"புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு தேவை'
By DIN | Published On : 22nd July 2019 10:26 AM | Last Updated : 22nd July 2019 10:26 AM | அ+அ அ- |

புற்றுநோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு தேவை என்று ஓய்வு பெற்ற விங் கமாண்டரும், புற்றுநோய் மருத்துவருமான வி.ஜி.விஷிஷ்டா தெரிவித்தார்.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு முகாமில், அவர் பேசியது:-
சர்வதேச அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிப்பதற்காக நவீன தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. புதிய தொழில்நுட்பங்களால் மூளை, மார்ப்பு, ரத்த, கிளைய மூலச் செல்புற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். இது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் குறைவாக உள்ளது. புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும்.
ஆரம்பக்கட்டத்திலேயே புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றால் அறுவை சிகிச்சை இல்லாமல், மருத்து, மாத்திரைகள் மூலம் குணமாக்க முடியும் என்றார்.