ஜூலை 28-இல் கர்நாடக திராவிடர் கழக செயல் கூட்டம்
By DIN | Published On : 24th July 2019 09:04 AM | Last Updated : 24th July 2019 09:04 AM | அ+அ அ- |

பெங்களூரில் ஜூலை 28-ஆம் தேதி கர்நாடக மாநில திராவிடர் கழக செயல்திட்டக் கூட்டம் நடக்கவிருக்கிறது.
இதுகுறித்து கர்நாடக மாநில திராவிடர் கழக செயலாளர் இரா.முல்லைக்கோ வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரு அல்சூரில் உள்ள திராவிடர் அகத்தில் ஜூலை 28-ஆம் தேதி காலை 10மணிக்கு கர்நாடகமாநில திராவிடர் கழகத்தின் செயல்திட்டக் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்துக்கு மாநில திராவிடர்கழகத் தலைவர் மு.சானகிராமன் தலைமை வகிக்கிறார். செயலாளர் இரா.முல்லைக்கோ அனைவரையும் வரவேற்கிறார். இக் கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், சேலம் பவளவிழா மாநாடு, மறைந்த பிரேம்குமார் நினைவேந்தல், பெரியார் சமூக காப்பணி செயல்பாடுகள், இயக்க வளர்ச்சிப்பணிகள் குறித்து விவாதிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.