Enable Javscript for better performance
கர்நாடகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து, அடுத்த 48 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
     இதுகுறித்து பெங்களூரு வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் கடலோர கர்நாடகத்தில் பரவலாகவும், தென்கர்நாடகத்தின் உள்பகுதிகளின் ஒருசில பகுதிகளிலும் மழை பெய்தது. ஆனால், வட கர்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை பலவீனமாக உள்ளது.
     கடந்த 24 மணி நேரத்தில் ஷிராளி, ஹொன்னாவர், கார்வாரில் தலா 10 மிமீ, கோடா, பட்கல், கோகர்ணாவில் தலா 9மிமீ, உடுப்பி, கெர்சொப்பா, மன்கீய்ல் தலா 80மிமீ, மங்களூரு, மூடபித்ரி, குந்தாபுரா, சித்தாபுரா, கத்ராவில் தலா 70மி.மீ மழை பதிவாகின.
     வானிலை முன்னறிவிப்பு: ஜூலை 25 முதல் 26-ஆம் தேதிவரை கடலோர கர்நாடகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிதமானது முதல் பலத்த மழை பெய்யக்கூடும். அதேபோல, கர்நாடகத்தின் உள்பகுதிகளின் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர கர்நாடகத்தின் அனைத்து மாவட்டங்கள், வடகர்நாடகம், தென்கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
     பெங்களூரில் மழை: அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒருசில நேரங்களில் தரையில் காற்று பலமாக வீசும். இந்த 2 நாள்களில் பெங்களூரில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 29 டிகிரி மற்றும் குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai