Enable Javscript for better performance
காங்கிரஸுடன் ம.ஜ.த. கூட்டணி தொடருமா? குமாரசாமி விளக்கம்- Dinamani

சுடச்சுட

    

    காங்கிரஸுடன் ம.ஜ.த. கூட்டணி தொடருமா? குமாரசாமி விளக்கம்

    By DIN  |   Published on : 25th July 2019 08:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகத்தில் காங்கிரஸுடன் மஜதவின் கூட்டணி தொடருமா? என்பது எனக்கு தெரியாது என்று காபந்து முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
     பெங்களூரு, மஜத அலுவலகத்தில் புதன்கிழமை மஜத எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு முன்பாக, செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மஜதவின் எதிர்காலச் செயல்பாடுகளை தீர்மானிப்பதற்காக மஜத எம்எல்ஏக்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். மஜதவை வளர்த்தெடுப்பதே எங்கள் முன்னால் இருக்கும் பெரும் சவால். கர்நாடக மக்களின் நம்பிக்கையைப் பெற்று, இந்தச் சூழ்நிலையில் இருந்து கடந்து மஜதவை வளர்ப்பதுதான் எங்களது இப்போதைய கவலை. இது குறித்து விவாதிக்க இருக்கிறோம். காங்கிரசுடன் மஜதவின் கூட்டணி தொடருமா? என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. எதிர்காலம் குறித்துகாங்கிரஸ் தலைவர்கள் என்ன முடிவில் இருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.
     காங்கிரஸுடன் கூட்டணியைத் தொடர்வது குறித்து இதுவரை நாங்கள் எதையும் பேசவில்லை என்றார் குமாரசாமி.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai