Enable Javscript for better performance
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எனது பணி திருப்தியளிக்கிறது: பேரவைத் தலைவர் ரமேஷ்குமார்- Dinamani

சுடச்சுட

    

    நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எனது பணி திருப்தியளிக்கிறது: பேரவைத் தலைவர் ரமேஷ்குமார்

    By DIN  |   Published on : 25th July 2019 08:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எனது பணி திருப்தியளிக்கிறது என்று பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் தெரிவித்தார்.
     இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு தனது ஆட்சியை இழந்துள்ளது. முதல்வர் குமாரசாமி ராஜிநாமா செய்துள்ளார். அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு திருப்தி ஏற்பட்டிருக்கும் என்று கருதுகிறேன். சட்டம், புத்தகங்களில் இருந்தால் மட்டும் போதாது; அது செயல்பாட்டுக்கு வர வேண்டும். அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்களை ஏற்பது குறித்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன். ராஜிநாமா கொடுத்த அமைச்சர்கள் குறித்து ஆளுநர் நடவடிக்கை எடுக்கவிருக்கிறார். நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத ஸ்ரீமந்த் பாட்டீலுக்கு எதிராக காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. எனவே, விசாரணைக்கு ஆஜராகுமாறு ஸ்ரீமந்த் பாட்டீலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எனது பணி திருப்தி அளிக்கிறது, பெருமையாகவும் இருக்கிறது. எதிர்கால நடவடிக்கைகளை ஆளுநர் கவனித்துக் கொள்வார் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai