Enable Javscript for better performance
நிலமில்லா விவசாயிகள் கடன் தள்ளுபடி சட்டம்: காபந்து முதல்வர் குமாரசாமி- Dinamani

சுடச்சுட

    

    நிலமில்லா விவசாயிகள் கடன் தள்ளுபடி சட்டம்: காபந்து முதல்வர் குமாரசாமி

    By  பெங்களூரு,  |   Published on : 25th July 2019 08:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    karnataka

    வட்டிக்கு கடன் கொடுப்போரிடம் நிலமில்லா விவசாயிகள், சிறு விவசாயிகள், விவசாயக்கூலிகள், நலிவடைந்தோர் பெற்றிருக்கும் கடன் தள்ளுபடி செய்வதற்காக கடன் தள்ளுபடி சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று காபந்து முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
     பெங்களூரு கிருஷ்ணர் அரசு இல்லத்தில் புதன்கிழமை 14 ஆண்டுகால கூட்டணி ஆட்சிக் காலத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த அரசு உயரதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு, புகைப்படம் எடுத்துக்கொண்ட பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
     வட்டிக்கு கடன் கொடுப்போரிடம் நிலமில்லா விவசாயிகள், சிறுவிவசாயிகள், விவசாயக்கூலிகள், நலிவடைந்தோர் பெற்றிருக்கும் கடன் தள்ளுபடி செய்வதற்காக கடன் தள்ளுபடிசட்டத்தை ஏற்கெனவே சட்டப்பேரவையில் நிறைவேற்றி, அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அளித்திருந்தோம்.
     குடியரசுத் தலைவரும் இச்சட்டத்துக்கு ஜூலை 16-ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளார். இதற்காக குடியரசுத் தலைவருக்கு நன்றிதெரிவித்துக் கொள்கிறோம். அதன்பேரில் செவ்வாய்க்கிழமை(ஜூலை 23) கடன் தள்ளுபடி சட்டத்திற்கான அதிகாரப்பூர்வ ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது கர்நாடக மக்களுக்கு நான் விட்டுச்செல்லும் பரிசாகும். இந்த சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு வட்டிக்கு கடன் கொடுப்போரிடம் பெற்றுள்ள கடன் தொகையை இனிமேல் செலுத்தவேண்டியதில்லை. இதுதொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுக்க இயலாது. அப்படி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டால், அதை ஏற்கவும் கூடாது. ஜூலை 23-ஆம் தேதிக்கு முன்பு ரூ.1.20 லட்சம் ஆண்டு வருவாய் இருக்கும் நலிவுற்றபிரிவை சேர்ந்த அனைவரும் இச்சட்டத்தால் பயனடையமுடியும்.
     இந்த சட்டத்தின்படி மாவட்ட உதவி ஆட்சியர்கள் கடன் தள்ளுபடி அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள். கடன் பெற்றுள்ளது தொடர்பான தகவல்களை 90 நாள்களுக்குள் மாவட்ட உதவி ஆட்சியர்களிடம் அளித்தால், கடன் தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுப்பார்கள்.
     இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒருவேளை நிலங்கள் அடமானம் வைக்கப்பட்டிருந்தாலும், அதை விடுவித்து தருவார்கள். கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழையும் அளிப்பார்கள். கடன் தள்ளுபடி செய்து பிறப்பிக்கப்படும் உத்தரவை வட்டிக்கு கடன் அளிப்போர் மதிக்காவிட்டால், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க இயலும். ஓராண்டு சிறைத் தண்டனையுடன் ரூ.1 லட்சம் வரையில் அபராதம் விதிக்கப்படும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai