Enable Javscript for better performance
பைக்குகள் மீது லாரி மோதல்: 4 பேர் பலி- Dinamani

சுடச்சுட

    

    மைசூரு அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
     மைசூரில் உள்ள ஹோட்டலில் ஊழியராகப் பணியாற்றி வந்த ராகவேந்திரா, மதுகுமார், மது, அகமதுகான் ஆகிய நால்வரும் செவ்வாய்க்கிழமை நண்பரின் ஊரில் நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொண்டுவிட்டு, புதன்கிழமை காலை 2 மோட்டார் சைக்கிளில் மைசூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
     டி.நரசிப்புரா-மைசூரு நெடுஞ்சாலையில் இன்டாமடுவலு கிராமம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் காயமடைந்த ராகவேந்திரா, மதுகுமார், மது, அகமதுகான் ஆகியோர் நிகழ்விடத்திலே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து டி.நரசிப்புரா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai