Enable Javscript for better performance
மஜதவை வளர்த்தெடுக்க மாநிலம் முழுவதும் நடைபயணம்- Dinamani

சுடச்சுட

    

    மஜதவை வளர்த்தெடுக்க மாநிலம் முழுவதும் நடைபயணம்

    By பெங்களூரு  |   Published on : 25th July 2019 08:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kumarasamy

    மஜதவை வளர்த்தெடுக்க மாநிலம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள மஜத எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
     பெங்களூரு மஜத அலுவலகத்தில் புதன்கிழமை மஜத எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காபந்து முதல்வர் குமாரசாமி, முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா, கட்சியின் மாநிலத் தலைவர் எச்.கே.குமாரசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய எச்.டி.தேவெ கெளடா,"கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கூட்டணி அரசுக்கு எதிராக செயல்பட்ட மஜத எம்எல்ஏக்கள் எச்.விஸ்வநாத், கோபாலையா, நாராயணகெளடா ஆகிய 3 பேரையும் இனி கட்சியில் சேர்த்துக் கொள்ளக்கூடாது. கட்சியில் ஒழுக்கம் மிகவும் முக்கியம். மாநிலம் முழுவதும் கட்சியைப் பலப்படுத்துவதற்காக நடைபயணம் நடத்த வேண்டும்.
     மேலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்களை நடத்தவேண்டும். முதல்கட்ட நடைபயணத்தை மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடில் அடுத்தமாதம் தொடங்கவிருக்கிறேன். இரண்டாம்கட்ட நடைபயணம் வட கர்நாடகத்தில் நடைபெறும்.
     கர்நாடக அரசியலில் தேசியக் கட்சியான பாஜக, வெளிப்படையாக குதிரைபேரத்தில் ஈடுபட்டதை நான் இதுவரை பார்த்ததில்லை. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை அறையில் அடைத்துவைத்துக் கொண்டு ஆட்சியை கவிழ்க்கும் அளவுக்கு அரசியல் கீழ்த்தரமாகியுள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம், பேரவைத்தலைவர் என்ன முடிவெடுப்பார்கள் என்பது தெரியவில்லை' என்றார். இந்த கூட்டத்தில் கர்நாடகத்தில் காங்கிரஸுடன் கூட்டணியை தொடர்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
     கூட்டத்தின் முடிவில் குமாரசாமி கூறுகையில்,"மஜதவுடன் இணைந்து செயல்பட காங்கிரஸ் விரும்புகிறதா? என்பது தெரியவில்லை. ஆனால், காங்கிரஸ் கேட்டுக் கொண்டால் இணைந்து செயல்படுவோம். எங்களுக்கு கூட்டணியைவிட கட்சியைப் பலப்படுத்துவதில் கவனம் செலுத்தவிருக்கிறோம். கூட்டணி குறித்து காங்கிரஸின் முடிவுக்காக காத்திருக்கிறோம். கர்நாடக மாநிலத்தில் அரசியல் நிலையற்றத்தன்மை தொடரும்
     என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai