Enable Javscript for better performance
மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராகிறார் சித்தராமையா?- Dinamani

சுடச்சுட

    

    மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராகிறார் சித்தராமையா?

    By  பெங்களூரு,  |   Published on : 25th July 2019 08:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Siddaramaiah

    கர்நாடக முன்னாள் முதல்வரான சித்தராமையாவுக்கு மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராகும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
     கர்நாடக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மஜத-காங்கிரஸ் கூட்டணி வீழ்ந்ததைத் தொடர்ந்து, அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க பெங்களூரு, காங்கிரஸ் அலுவலகத்தில் புதன்கிழமை காங்கிரஸ் மூத்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்களின் பதவிநீக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது.
     மேலும் எதிர்க்கால அரசியல் நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. ஒருவேளை பாஜக ஆட்சி அமைந்தால், எதிர்க்கட்சியாக காங்கிரஸ் அமர வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், எதிர்க்கட்சித் தலைவராக யார் செயல்படுவது என்பது பற்றியும் அலசப்பட்டது. தன்னை எதிர்க்கட்சித் தலைவராக்க வேண்டும் என்று டி.கே.சிவக்குமார், ஜி.பரமேஸ்வர் உள்ளிட்டோர் கேட்டுக் கொண்டனர்.
     எனினும், மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசை வீழ்த்தி, ஆட்சி அமைக்கவிருக்கும் பாஜகவை எதிர்கொள்ள சித்தராமையாதான் சரியானவர் என்று கூட்டத்தில் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவெடுக்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. எனினும், எதிர்க்கட்சித் தலைவராக மீண்டும் சித்தராமையா பதவியேற்பார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
     கடந்தமுறை பாஜக ஆட்சி நடைபெற்ற போது எதிர்க்கட்சித் தலைவராக சித்தராமையா பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai