Enable Javscript for better performance
முதலாம் காலாண்டில் சிண்டிகேட் வங்கியில் லாபமில்லை- Dinamani

சுடச்சுட

    

    முதலாம் காலாண்டில் சிண்டிகேட் வங்கியில் லாபமில்லை என்று அவ்வங்கியின் மேலாண் இயக்குநர் மிருதஞ்செயா மகாபத்ரா தெரிவித்தார்.
     இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 2019-20-ஆம் நிதியாண்டில் ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முதலாவது காலாண்டில் வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.4,75,225 கோடியாக உள்ளது. செயல்பாட்டு லாபம் 45 சதவீதம் உயர்ந்து ரூ. 810 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ. 558 கோடியாக இருந்தது.
     வங்கியின் நிகர நஷ்டம் ரூ. 980 கோடியாக உள்ளது. முதலாம் காலாண்டின் கடன் வழங்கல் ரூ.2,65,664 கோடியாக உள்ளது. இதே காலகட்டத்தில் வங்கியின் மொத்த வாராக்கடன் 11.76 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 5.96 சதவீதமாக உள்ளது. முதலாம் நிதியாண்டில் வங்கிக்கு லாபம் ஏதுமில்லை. என்றாலும் வரும் நாள்களில் லாபம், வைப்பு உள்ளிட்டவைகளை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பேட்டியின் போது சிண்டிகேட் வங்கியின் செயல் இயக்குநர் எஸ்.கிருஷ்ணன், அஜய்குரானா, சிறப்பு அதிகாரி நாகேஷ்வரராவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai